Home இலங்கை சமூகம் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் காலமானார்

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் காலமானார்

0

இலங்கையின் பிரதான பௌத்த பீடங்களின் ஒன்றான அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க தேரரான அனமடுவே ஶ்ரீ தம்மதஸ்ஸி தேரர் காலமானார்.
தம்மஸ்ஸி தேரர் தனது 67 வயதில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் உடல்நலக்குறைவால் கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பௌத்த சமயத்துறையில்

குருநாகலில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் கொண்ட அத்கந்த ராஜமஹா விஹாரையின் பிரதம சங்கநாயகராகவும், இலங்கை பிக்கு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியராகவும் இவர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு, இலங்கையின் பௌத்த சமயத்துறையில் ஒரு மாண்புமிக்க பண்டிதரும் ஆன்மீக வழிகாட்டியுமான முக்கிய தலைவரை இழந்ததாகக் கருதப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version