Home சினிமா புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகர் ஆனந்த் பாபு.. எந்த தொடர் தெரியுமா?

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகர் ஆனந்த் பாபு.. எந்த தொடர் தெரியுமா?

0

ஆனந்த் பாபு

தமிழ் சினிமாவில் நாம் கொண்டாடிய பல கலைஞர்கள் இப்போது இல்லை.

அப்படி காமெடியனாக சிறந்த நடிகராக தன்னை நிரூபித்து ரசிகர்கள் மனதில் இப்போதும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நாகேஷ். இவரது மகன் ஆனந்த் பாபுவும் சினிமாவில் நடிக்க தொடங்கினார், ஆனால் சரியான படங்கள் அமையவில்லை.

இப்போது வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் அதிகம் நடித்து வருகிறார்.

புதிய தொடர்

கடைசியாக விஜய் டிவியில் முத்தழகு தொடர் நடித்து வந்தார், இப்போது அது முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில் ஆனந்த் பாபு விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாக இருக்கும் பூங்காற்று திரும்புமா என்ற தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

மற்றபடி இவரது கதாபாத்திரம் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை. இந்த புதிய தொடரில் சமீர் மற்றும் ஷோபனா இணைந்து நடிக்க இருக்கிறார்களாம். 

NO COMMENTS

Exit mobile version