Home முக்கியச் செய்திகள் பொது மக்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை – ஆனந்த விஜேபால

பொது மக்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை – ஆனந்த விஜேபால

0

பெரிய நீலாவணை காவல்நிலையத்தில் பெண் ஒருவர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணை நடத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala)  தெரிவித்துள்ளார்.

பெரிய நீலாவணை காவல்நிலையத்தில் முறைப்பாடளிப்பதற்கு சென்ற பெண் ஒருவர் மீதி காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் பாதிப்படைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் (Srinesan) நாடாளுமன்றில் நேற்று (10.01.2027) தெரிவித்தார்.

உடனடியாக விசாரணை

அவரை தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், குறித்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

அவர்கள் இருவருக்கும் பதிலளித்து கருத்துரைத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, குறித்த சம்பவம் தொடர்பான விபரங்களை சமர்ப்பித்தால் உடனடியாக விசாரணையை நடத்த முடியும் எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் காவல்நிலையங்களில் அவ்வாறான தாக்குதல்களுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டிருந்தார்.

NO COMMENTS

Exit mobile version