Home இலங்கை அரசியல் குற்றச் செயல்கள் தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

குற்றச் செயல்கள் தொடர்பில் நாடாளுமன்றில் அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

0

இலங்கையில் 2089 துப்பாக்கிகள் ஜுலை 31 ஆம் திகதி வரை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று(05) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளை சட்டத்தின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்தின கேட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய போது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மனித படுகொலைகள்

தொடர்ந்து பேசிய அவர்
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்கள், இலங்கை பொலிஸ், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை, அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகம், தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம்,
தேசிய காவல் நிறுவனம் மற்றும் ஜனாதிபதி செயலகம், நாடாளுமன்றம், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம், தகவல் மையம் ஆகியன தனது அமைச்சுக்கு கீழ் வருவதாகவும் தெரிவித்த அவர்,
இலங்கை பொலிஸால் 128 சம்பவங்கள் விசாரணை செய்யப்படுகின்றன.

துப்பாக்கியை பயன்படுத்தி மேற்கொண்ட மனித படுகொலைகள் தொடர்பில் மூன்று வழக்குகள் அதில் 241 பேர் கைது,
துப்பாக்கியை பயன்படுத்திய கொலை முயற்சி காயம் ஏற்படுத்தல் தொடர்பில் 180 பேர் கைது.

மேலும் தடைசெய்யப்பட்ட மிருகங்களை வேட்டையாடுதல் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலைகளுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள்

மனித படுகொலைகளுக்கு பயன்படுத்திய ஆயுதங்கள்
டி 56 10, பிஸ்தோல் 05,ரிவோல்வர் 01,கட்டுதுவக்கு 05,ஏனையவை 07 மொத்தம் 27 அகும்.

   

துப்பாக்கியை பயன்படுத்திய கொலை முயற்சி மற்றும் காயம் ஏற்படுத்தல்:
டி56 02,பிஸ்தோல் 07,ரி வோல்வர் 02,ஏனையவை 22 மொத்தம் 33 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மனித கொலைகள் தொடர்பில் மொத்தமாக 425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு கைப்பற்றப்பட்ட மொத்த ஆயுதங்கள் 2089 அதில் டி 56-18, பிஸ்தோல் 49, ரிவோல்வர் 44,கட்டு துவக்கு 1703 மேலும் பல வகையான ஆயுதங்களும் அடங்கும்.   

NO COMMENTS

Exit mobile version