ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து மூன்று பெண்கள் உட்பட 11 இந்தியர்களை தலங்கம காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
நேற்று இரவு(04) தலங்கம, காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைதுகள் இடம்பெற்றன. தலங்கம காவல் நிலைய அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைபேசிகள்,மடிக்கணனிகள் பறிமுதல்
சூதாட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 20 கைபேசிகள், மூன்று மடிக்கணினிகள் மற்றும் ஒரு டேப்லெட்டை காவல்தறையினர் பறிமுதல் செய்தனர்.
பெண் சந்தேக நபர்கள் 22, 30 மற்றும் 43 வயதுடையவர்கள், ஆண் சந்தேக நபர்கள் 25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
