Home முக்கியச் செய்திகள் வடக்கு, கிழக்கில் 2500 புதிய வீடுகள் : அரச தரப்பின் மகிழ்ச்சியான அறிவிப்பு

வடக்கு, கிழக்கில் 2500 புதிய வீடுகள் : அரச தரப்பின் மகிழ்ச்சியான அறிவிப்பு

0

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைபெறவில்லை என வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க (Susil Ranasinghe) தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றத்துக்காக அடுத்த ஆண்டு 2,500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் நேற்று (24) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”பெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் பெருந்தோட்ட மக்களுக்கான வீடமைப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு பாதீட்டில் போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட பகுதிகளின் உட்கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் மீள்குடியேற்றத்துக்காக 5,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அடுத்தாண்டு 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

இந்தநிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்“ என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version