Home இலங்கை அரசியல் நுகேகொடை பேரணி : ஹரினின் கருத்தை விமர்சித்த சஜித் அணி

நுகேகொடை பேரணி : ஹரினின் கருத்தை விமர்சித்த சஜித் அணி

0

நுகேகொடை பேரணியில் ஹரின் பெர்னாண்டோ ரணில் விக்ரமசிங்கவின் செய்தியை பொக்கட்டில் போட்டுக் கொண்டு தனது கருத்தை கூறினார் என்றே தோன்றுகிறது என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,

ஹரினின் அரசியலை புரிந்து கொள்ள முடியாது

அவர் நாமலை ஜனாதிபதியாக்க முயற்சிக்கிராரோ என சிந்திக்கவும் தோன்றுகிறது.கடந்த காலங்களிலும் சஜித்துக்கும் இவ்வாறு மேடைகளில் பிரசாரம் செய்தார்.

பின்னர் ரணிலுடன் ஒட்டிக் கொண்டார்.அவரின் அரசியலை எம்மால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.
களத்தில் எதிர்க்கட்சியின் பலம் எம்மிடம் தான் உள்ளது.

அரசாங்கத்திற்கு அடுத்து எங்கள் பக்கமே அதிக பலம் இருக்கிறது.எமது பொது எதிரி தேசிய மக்கள் சக்தியே.அதற்கு எதிரான முதல் எதிர்ப்பாக நுகேகொடை பேரணி அமைந்துள்ளது.

அதற்கு எமது ஆசிர்வாதங்களை நாம் முழுமையாக வழங்கினோம்.எமது பாரிய எதிர்ப்பை சமீபத்தில் காட்டுவோம். அதற்கு அவர்களுக்கும் அழைப்பு விடுப்போம் என்றார்.

NO COMMENTS

Exit mobile version