Home சினிமா அரசன் படத்தில் நடிக்கும் முன்னணி நடிகை.. அவரே கொடுத்த ஹிண்ட்.. புகைப்படத்தை பாருங்க

அரசன் படத்தில் நடிக்கும் முன்னணி நடிகை.. அவரே கொடுத்த ஹிண்ட்.. புகைப்படத்தை பாருங்க

0

அரசன்

வடசென்னை உலகில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் அரசன். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வரும் இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்ததிலிருந்து எதிர்பார்ப்பு வேற லெவலில் உள்ளது.

மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.அது வில்லன் கதாபாத்திரமா அல்லது வேற ஏதேனும் கதாபாத்திரமா என்பது தெரியவில்லை.

போன ஜென்மத்தில் நான் அஜித்துடன் பிறந்தவன்… பிரபல நடிகர் ஓபன் டாக்

வடசென்னை உலகில் இப்படம் உருவாகி வருவதால், வடசென்னை படத்தில் வந்த கதாபாத்திரங்கள் இப்படத்திலும் வரும் என கூறப்படுகிறது. தனுஷ் கூட கேமியோ ரோலில் வர வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

நடிகை கொடுத்த ஹிண்ட்

இந்த நிலையில், அரசன் படத்தில் சந்திரா கதாபாத்திரம் வருவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஹிண்ட் தரும் வகையில், நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடசென்னை படத்தில் வரும் சந்திரா கதாபாத்திரத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் அவர் ‘சந்திரா’ என குறிப்பிட்டுள்ளார். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது அவரும் இப்படத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் உறுதி செய்துவிட்டனர்.

இதோ அவர் வெளியிட்டுள்ள பதிவு: 

NO COMMENTS

Exit mobile version