Home சினிமா அங்காடித் தெரு பட புகழ் நடிகை சோபியாவை நியாபகம் இருக்கா… என்ன பண்றாங்க தெரியுமா, குடும்ப...

அங்காடித் தெரு பட புகழ் நடிகை சோபியாவை நியாபகம் இருக்கா… என்ன பண்றாங்க தெரியுமா, குடும்ப போட்டோ

0

அங்காடித் தெரு

கடந்த 2010ம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் அங்காடித் தெரு.

இதில் மகேஷ், அஞ்சலி, வெங்கடேஷ், பாண்டி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்கள்.

படத்தின் கதை என்னவென்றால் சென்னை டி-நகரில் உள்ள துணிக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் பிரச்சனையை அழுத்தமாக பேசும் படம் தான் இது.

சோபிதா

இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, பாண்டி கதாபாத்திரத்தை தாண்டி மக்களிடம் கவனம் பெற்றது சோஃபியா வேடம்.

இந்த கதாபாத்திரத்தில் சுகுணா என்பவர் தான் நடித்திருந்தார், இப்படத்திற்கு பிறகு சினிமாவில் தலைக்காட்டாதவர் அங்காடித் தெரு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய நாகராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறாராம் சுகுணா, அதன் உரிமையாளராகவும் உள்ளார். இவர் ஒரு பேட்டியில், எங்களுக்கு திருமணம் முடிந்தது, நான் கர்ப்பமாக இருந்தேன். 8வது மாதம் கருக்கலைப்பு செய்துவிட்டேன், குழந்தை வயிற்றில் இறந்துவிட்டது.

இதனால் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்ற முடிவை எடுக்க வேண்டியதாகிவிட்டது என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version