அனிருத்
இன்றைய தேதியில் இந்திய சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார் அனிருத்.
ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நட்சத்திரங்களின் படம் என்றாலே, அனிருத் இசை தான் ஒலிக்கிறது.
நம்பர் 1 இசையமைப்பாளர் என கூறப்படும் அனிருத், ஒரு படத்திற்காக ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
இத்தனை கோடியா
இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில் இசையமைக்க அனிருத்
ரூ.17 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் அனிருத் இசை தனி வரவேற்பை பெற்றது.
அவரின் பங்கும் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. தற்போது, ஜெயிலர் 2 ஸ்கிரிப்ட் வேலைகளில் நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ரஜினியின் பிறந்தநாள் அன்று இப்படம் குறித்த அப்டேட் வெளிவரும் என கூறப்பட்டது.
வேட்டையன் படத்தை இப்படி செய்துவிட்டார்கள்.. இயக்குனர் ஞானவேல் வேதனை
ஆனால், அவ்வாறு அப்டேட் வெளிவராமல் போனதற்கு அனிருத் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. அவர் ரூ. 17 கோடி சம்பளமாக கேட்டதால் தயாரிப்பு தரப்பு தயக்கம் காட்டி வருவதாகவும், அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுவதால் ஜெயிலர் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியாக தாமதம் ஏற்படுகிறது என கூறப்படுகிறது.