அஞ்சான்
இயக்குநர் லிங்குசாமி நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம் அஞ்சான்.
இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை, இதனால் படுதோல்வியடைந்தது.
இதன்பின், 11 ஆண்டுகள் கழித்து கடந்த நவம்பர் 28ஆம் தேதி அஞ்சான் திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர்.
அதுவும் ரீ எடிட் செய்யப்பட்டு அஞ்சான் படம் வெளிவந்தது.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துக்சென்று நிலா சொன்ன விஷயம்… அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம்
வசூல்
இந்த ரீ எடிட் வெர்ஷனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வரவில்லை.
ஆம், ரீ-ரிலீஸாகியுள்ள அஞ்சான் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 75 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள ஆவரேஜ் வசூலாக பார்க்கப்படுகிறது.
