Home விளையாட்டு இந்திய அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு

0

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான தனது அணியை இலங்கை அறிவித்துள்ளது.

தனஞ்சய டி சில்வா தலைமையிலான இந்த அணியின் துணை தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக குசல் மெண்டிஸ் இந்த அணியில் இடம்பெறவில்லை, இதன் விளைவாக, முதல் போட்டிக்கான துணை தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

நிரோஷன் திக்வெல்ல அணியில்

இதற்கிடையில், குசல் மெண்டிஸுக்குப் பதிலாக விக்கெட் காப்பாளரான நிரோஷன் திக்வெல்ல அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

2023 மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு அவர் இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை.

இதன் மூலம் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் அணியில் திக்வெல்ல இடம்பிடித்துள்ளார்.

மேலும், கடந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் விளையாடாத பல வீரர்களும், இரண்டு புதிய வீரர்களும் இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, இதுவரை எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத துடுப்பாட்ட வீரரான பசிந்து சூரியபண்டா மற்றும்
சகலதுறை வீரரான கேசர நுவந்த ஆகிய இரண்டு வீரர்களும் இலங்கை அணியில் அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, ஒகஸ்ட் 15 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாக உள்ளது.


இலங்கை டெஸ்ட் அணி

தனஞ்சய டி சில்வா c

லஹிரு உதர நிஷான்

மதுஷ்க

கமிந்து மெண்டிஸ் vc

தினேஷ் சந்திமால்

பசிந்து சூரியபண்டார

சோனால் தினுஷ

நிரோஷன் டிக்வெல்ல – wc

ரமேஷ் மெண்டிஸ்

பிரபாத் ஜெயசூரிய

கேஷார நுவந்த

மிலன் ரத்நாயக்க 

Source: https://ibctamil.com/article/announced-srilanka-test-squad-against-india-1786525290

NO COMMENTS

Exit mobile version