Home சினிமா அஜித் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா.. ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் தெரியுமா

அஜித் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா.. ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தார் தெரியுமா

0

நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் அஜித்துடன் இணைந்து இதுவரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஸ்வாசம், ஏகன், பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

ஆனால், அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் நயன்தாரா நடிக்க மறுத்த விஷயம் உங்களில் பலருக்கும் தெரிந்திருக்காது. ஹிந்தியில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டு அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

நடிக்க மறுத்த நயன்தாரா

இப்படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் ரீமேக் செய்து நடித்திருந்தார். இப்படத்தில் பவன் கல்யாணியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவை கேட்டுள்ளனர். ஆனால், அது மிகவும் சிறிய கதாபாத்திரம் என்பதால், அப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்க நயன்தாராவிற்கு ஆசை இருந்தபோதும் கூட, அந்த கதாபாத்திரம் சிறுது என்பதன் காரணமாகவே இப்படத்தில் நடிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. அதன்பின், அந்த கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/nayanthara-rejected-ajith-remake-movie-1744096061

NO COMMENTS

Exit mobile version