Home இலங்கை கல்வி உடன் ஆரம்பிக்கப்படும் வகுப்புகள்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு

உடன் ஆரம்பிக்கப்படும் வகுப்புகள்: கல்வி அமைச்சரின் அறிவிப்பு

0

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு தேர்வு முடிந்த உடனேயே கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் தேசிய கல்வி நிறுவகத்தின் உத்தியோகபூர்வ இணைய வானொலியை (NIE Visual Radio) ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படுமா..! அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

சவாலான பணி

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கோவிட் பேரழிவின் போது பாடசாலைகள் மூடப்பட்டதால் தவறவிட்ட படிப்பு மற்றும் பாடசாலை பரீட்சைகள் அட்டவணையை மீட்டெடுப்பதற்கான திட்டத்தின் படி இம்முறை குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான கொடுப்பனவு குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

மேலும் இந்த சவாலான பணியை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கும் மிகுந்த அர்ப்பணிப்பு தேவை என்றும் அவர் கூறியுள்ளார். 

இளம் தாயின் கொடூர செயல் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version