Home இலங்கை சமூகம் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவித்தல்

கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிவித்தல்

0

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

குறித்த இரு மாவட்டங்களிலும் அண்மைக்காலமாக கனமழை பெய்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

இந்த பகுதிகளில் 27
ஆம் திகதி வரை மழை தொடரும் எனவும் 24 முதல் 27 வரை மிகவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம்.

இதன்காரணமாக முன்னெடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1. வீட்டின் அருகிலும் சாலைகளிலும் உள்ள வடிகால்களை சுத்தப்படுத்துங்கள்.
சிரமமாக இருந்தால் கிராமநிலதாரியிடம் தகவல் வழங்கி உதவுங்கள்.

2. மழை நீடித்தால் 3–4 நாட்களுக்கு தேவையான உலர் உணவுகளை சேமித்து வையுங்கள்.

3. குழந்தைகளை வெள்ளநீரில் விளையாட விடாதீர்கள். பாதுகாப்பான குடிநீரை மட்டும்
பருகுங்கள்.

விழிப்புடன் இருங்கள் எனவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version