Home முக்கியச் செய்திகள் உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

0

2024 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை (GCE A/L) விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் (Examinations Department) வெளியிட்டுள்ளது.

இதன்படி, கால அவகாசம் கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், இறுதித் திகதி இன்று வரை நீடிக்கப்பட்டது.

உயர்தரப் பரீட்சை

பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இணையத்தினூடாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமெனத் திணைக்களம் அறிவித்திருந்தது.

இந்த ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://ibctamil.com/article/announcement-examinations-department-al-exam-1720793761?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version