Home இலங்கை சமூகம் அஸ்வெசும இரண்டாம் கட்டம்: வங்கி கணக்குகளை திறக்காதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அஸ்வெசும இரண்டாம் கட்டம்: வங்கி கணக்குகளை திறக்காதவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

0

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அஸ்வெசும உதவித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு, அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள், அந்தந்த பிரதேச செயலகங்களுக்குச் சென்று வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான உரிய கடிதத்தைப் பெற்று, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி அல்லது பிராந்திய மேம்பாட்டு வங்கி அல்லது தங்களுக்கு வசதியான வங்கி கிளையில் வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான கடிதத்தை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி கணக்கை திறக்காத பயனாளிகள்

அதன்படி, அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், தொடர்புடைய வங்கிக் கணக்கு விபரங்களை பிரதேச செயலகங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version