Home இலங்கை அரசியல் போதைப்பொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு! அமைச்சர் சூளுரை

போதைப்பொருள் பிரச்சினைகளுக்கு தீர்வு! அமைச்சர் சூளுரை

0

போதைப் பொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டே தீருவோம் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால சூளுரைத்துள்ளார். 

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பூநகரி பகுதிக்கு விஜயம்
மேற்கொண்டு பூநகரி மடத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில்
ஈடுபட்டிருந்தார்.

இதனையடுத்து அங்குள்ள மக்களோடு கலந்துரையாடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 எமது நடவடிக்கை தொடரும்

இதன்போது, அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், தேசிய மக்கள் சக்தியின்
கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ம.மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். 

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஒரு வருடத்திற்கு முன்பாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நாங்கள் இந்த ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டோம்.

அப்போது கூறியது போல போதைப்பொருட்களுக்கு எதிரான எமது நடவடிக்கை தொடரும்.  மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையான இளைஞர்களை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்புவது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version