Home இலங்கை சமூகம் மே தினத்தில் கொழும்பிற்கு வருபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

மே தினத்தில் கொழும்பிற்கு வருபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

0

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (01) கொழும்பு நகரை சுற்றி விசேட போக்குவரத்து திட்டமொன்றை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறவுள்ளமையினால் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நாளை 40 கூட்டங்கள் மற்றும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை  ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

மின்னல் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் பரிதாப மரணம்

மே தினக் கொண்டாட்டங்கள்

அத்துடன் இதன்போது, 19 மே தினக் கொண்டாட்டங்களும் இடம்பெறவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனுமதியின்றி மே தினக் கொண்டாட்டங்களின் காணொளிகளைப் பதிவு செய்ய ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்று வரும் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் காரணமாக இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தை காவல்துறையினர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரியுடன் இணைந்த விஜயதாஸ ராஜபக்ச: எச்சரிக்கை விடுத்த சந்திரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version