Home இலங்கை அரசியல் வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம்

வாகன இறக்குமதிக்கான அனுமதி! சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ள விடயம்

0

Courtesy: Sivaa Mayuri

வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.

வரியில்லா வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

ரணிலிடம் கோரிக்கை

இந்தநிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து தமது கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்(Ranil Wickremesinghe) உத்தியோகபூர்வமாக முன்வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தசாப்த காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே பல அமைச்சர்கள் தொடர்ந்தும் 12 வருடங்களுக்கு மேற்பட்ட வாகனங்களையே பயன்படுத்தி வருவதாக சபாநாயகர் முன்னதாக குறிப்பிட்டிருந்ததாக ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. 

சந்திரிக்கா இழைத்த மிகப் பெரிய தவறு! மனம் வருந்தும் நிலை

பயனாளிகளின் கணக்குகளில் 115 பில்லியன் ரூபா: மகிழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version