Home இலங்கை கல்வி இது இனி கட்டாயம் – மாணவர்களுக்கு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

இது இனி கட்டாயம் – மாணவர்களுக்கு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

0

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

தேசிய அடையாள அட்டை

குறிப்பாக, 2026 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ள க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கு முன்னர் தேசிய அடையாள அட்டையைத் தயார்படுத்திக் கொள்வது பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களின் பொறுப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விண்ணப்ப செயல்முறைகளை ஒழுங்குபடுத்தவும், விண்ணப்பதாரர்களின் தகவல்களை துல்லியமாக உறுதிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, தேசிய அடையாள அட்டை இதுவரை பெறாத மாணவர்கள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் அதனை விரைவாகப் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

Source: https://ibctamil.com/article/announcement-from-department-of-examinations-1780539371

NO COMMENTS

Exit mobile version