Home இலங்கை கல்வி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

0

அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என அனைவரும் இன்று சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.  

பாடசாலைகள் ஆரம்பம்

அந்த வகையில் மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை நாளை முதல் மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள 10,076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும். எவ்வாறாயினும் அனர்த்தங்களை எதிர்நோக்கிய 147 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

ஆரம்பமாகாத பாடசாலைகள் குறித்த விபரம்

அதற்கமைய ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 6 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகள் நாளை ஆரம்பிக்கப்பட மாட்டாது.

இதேவேளை அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை பின்பற்றப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version