Home சினிமா பராசக்தி படத்தின் கதை இதுதானா? வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்

பராசக்தி படத்தின் கதை இதுதானா? வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்

0

பராசக்தி

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள திரைப்படம் பராசக்தி. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படம் 2026 ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. விரைவில் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

ரீ ரீலிஸில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. சென்சேஷனல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

படத்தின் கதை

இந்த நிலையில், பராசக்தி படத்தின் கதை இதுதான் என கூறி தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

‘முன்னாள் மெட்ராஸ் மாநிலத்தில் நடைபெற்ற குடிமக்கள் மறுப்பு போராட்ட காலப்பின்னணியில் அமைந்த இந்தக் கதையில், கிளர்ச்சியாளர்களை தேடி ஒழிக்க வேண்டிய கடமையுடன் ஒரு கொடூரமும் புத்திசாலித்தனமும் கொண்ட அதிகாரி வருகிறார்.

செழியன் மற்றும் அவரது சகோதரர் சின்னதுரை இருவரும் முற்றிலும் வேறுபட்ட குணநலன்களை கொண்டவர்கள். ஒருவர் கடினமாக உழைக்கும் தீயணைப்பாளர், மற்றொருவர் ஒரு புரட்சியாளர். இவர்களுக்கிடையில் உயிர் ஆபத்தான பூனை-எலி விளையாட்டு போல ஒரு துரத்தல் தொடங்குகிறது.

தனது மக்களை பாதுகாக்க, அமைதியான வாழ்வை விட்டு விலக செழியன் கட்டாயப்படுத்தப்படுகிறார். இறுதியில் நீதிக்காக வலிமையான சக்திகளுக்கு எதிராக அவர் நின்று போராடும் கொடூரமான இறுதி போராட்டம் தான்’ பராசக்தி படத்தின் கதை என கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version