விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி 9ம் தேதி வெளிவர இருக்கிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் இந்த படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஹெச்.வினோத் வினோத் இயக்கி இருக்கும் இந்த படத்தின் கதை எப்படி இருக்க போகிறது என்றும் ஒரு பக்கம் எதிர்பார்ப்பு இருக்கிறது.
FDFS
இந்நிலையில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி உலகம் முழுக்க எத்தனை மணிக்கு தொடங்கும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை என்பதால் காலை 9 மணிக்கு தான் ஷோ தொடங்கும். அதே போல உலகம் முழுக்க மற்ற இடங்களில் எல்லாம் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு தான் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதனால் கிட்டத்தட்ட உலகம் முழுக்க ஒரே நேரத்தில் ஜனநாயகன் ரிலீஸ் ஆக இருக்கிறது.
வெளிநாடுகளில் முந்தைய நாள் ப்ரீமியர் காட்சிகள் இருக்காது என தெரிகிறது.
