Home இலங்கை அரசியல் மன்னார் நகர சபை மாதாந்த அமர்வில் அமளி துமளி : சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு

மன்னார் நகர சபை மாதாந்த அமர்வில் அமளி துமளி : சபை உறுப்பினர்கள் வெளிநடப்பு

0

Courtesy: nayan

மன்னார் நகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் திங்கட்கிழமை (15) காலை
10 மணியளவில் இடம்பெற்ற போது
சபையில் அமளி துமளி ஏற்பட்டதோடு,ஐந்து உறுப்பினர்கள் சபை அமர்வில் இருந்து
வெளி நடப்பு செய்துள்ளனர்.

மன்னார் நகர சபையின் 7 வது மாதாந்த அமர்வு நகர சபையின் தலைவர் டானியல்
வசந்தன் தலைமையில் ஆரம்பமானது.

கடுமையான வாக்குவாதம் 

சபை அமர்வு ஆரம்பமாகி சிறிது நேரத்திலேயே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி
உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

தவிசாளர் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதில்லை உட்பட பல
குற்றச்சாட்டுகளை முன் வைத்து சபை உறுப்பினர்கள் 5 பேர் சபையை
புறக்கணித்து உடனடியாக வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள்

வெளியேறிய உறுப்பினர்களை தவிர ஏனைய உறுப்பினர்களுடன் தவிசாளர் தொடர்ந்து சபை
அமர்வை முன்னெடுத்துச் சென்றார்.

வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள் சபையின் தவிசாளருக்கு எதிராக பல்வேறு
குற்றச்சாட்டுக்கள் முன் வைத்து தமது கருத்துக்களை தெரிவித்தனர்.  

NO COMMENTS

Exit mobile version