Home உலகம் பிரித்தானிய விசா முறைமையில் மாற்றம்: வெளியான தகவல்

பிரித்தானிய விசா முறைமையில் மாற்றம்: வெளியான தகவல்

0

பிரித்தானிய விசா முறைமையில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், இனி பிரித்தானிய கடவுச்சீட்களில் vignettes எனப்படும் முத்திரையிடப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஒக்டோபர் மாதம் முப்பதாம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப விசா

பிரித்தானியாவுக்கு, பணி, கல்வி மற்றும் குடும்ப விசாவில் வருவோர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் கடவுச்சீட்களில் (vignettes) எனப்படும் முத்திரையிடப்படும் வழக்கம் இருந்து வந்துள்ளது.

இதனடிப்படையில், இந்த முத்திரை இனி அவர்களுடைய கடவுச்சீட்களில் முத்திரையிடப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

புலம்பெயர்தல் 

அதற்கு பதிலாக, அவர்களுடைய புலம்பெயர்தல் நிலை (immigration status), இனி டிஜிட்டல் முறையில் e-visa ஆக பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா தனது புலம்பெயர்தல் அமைப்பை முழுமையாக டிஜிட்டல்மயமாக மாற்றுவதின் மற்றொரு படியாக இந்த மாற்றத்தைச் செய்துள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version