Home உலகம் அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்படவுள்ள பொங்குதமிழ் நிகழ்வு!

அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்படவுள்ள பொங்குதமிழ் நிகழ்வு!

0

அவுஸ்திரேலியாவில் பொங்கு தமிழ் எனும் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தமிழ் மக்களுக்கான சர்வதேச கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி இந்நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் குறித்த நிகழ்வு, மெல்போர்ன் நகரின் மையப்பகுதியான பெடரேஷன் ஸ்கொயரில் நடைபெற உள்ளது.

பொங்குதமிழ் நிகழ்வு

இந்தநிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி காலை பத்து மணி முதல் மதியம் ஒரு மணி வரை நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நிகழ்வை அனைத்து தமிழ் அமைப்புகள், பழைய மாணவர் அமைப்புகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் வாழும் இளையோர்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த தமிழர்களும் இணைந்து நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கவிருக்கும் இந்த நிகழ்வில் அவுஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் உட்பட பல தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version