Home இலங்கை பொருளாதாரம் அஸ்வெசும உதவித்தொகை தொடர்பில் விசேட அறிவிப்பு

அஸ்வெசும உதவித்தொகை தொடர்பில் விசேட அறிவிப்பு

0

அஸ்வெசும திட்டம் மூலம் ஏழ்மையான குடும்பங்களில் இதுவரை உதவித்தொகை பெற்று வந்த முதியவர்களுக்கு இம்மாதம் 20 ஆம் திகதி 3,000 ரூபா வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி வங்கி கணக்குகளில் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் குறித்த பணத்தைப் பெற முடியும் என்று தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

நலன்புரி நன்மைகள் சபை

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், நலன்புரி நன்மைகள் சபை, இலங்கை வங்கிகளுக்கு இடையேயான கொடுப்பனவு முறை(SLIPS) தொடர்பான அமைப்பின் மூலம் நலன்புரி குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் கணக்குகளில் நேரடியாக உதவித்தொகைகளை வரவு வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version