Home முக்கியச் செய்திகள் வரி செலுத்துனர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

வரி செலுத்துனர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்

0

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி (Income Tax) அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான திகதி குறித்து முக்கிய அறிவித்தல் வெளியாகி உள்ளது.

அந்தவகையிவ் அறிக்கை சமர்ப்பிக்க இறுதி நாள் இன்றுடன் (30) நிறைவடைவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (Inland Revenue Department) அறிவித்துள்ளது.

அறிக்கைகள் இணையவழி ஊடாக மட்டுமே பெறப்படும் என்றும் திணைக்களம் வெளியட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

அதற்கான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம், பிராந்திய மற்றும் நகர அலுவலகங்கள் இன்று வழமையான வேலை நாளாக திறக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஜாவத்தை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கிக் கிளையும் வருமான வரி செலுத்துவதற்காக திறந்து வைக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version