Courtesy: Sivaa Mayuri
நிதி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) உள்ளிட்ட நிறுவனங்களுடன் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe ) வெளியிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள்
நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வாகன இறக்குமதி தடை (Vehicle import) நீக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இதுவரை குறித்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாகன இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை ரூபாயின் (srilankan rupees) பெறுமதி சுமார் 7% வலுவடைந்துள்ளதுடன் இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் (2024) 3% வளர்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள நன்மை
மேலும், சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த வருமான இலக்குகளை அடைவதற்கு, வாகன இறக்குமதி செயற்பாடு தேவை என்ற திறைசேரி அதிகாரிகள் அடங்கிய குழுவின் பரிந்துரை, அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், மோட்டார் வாகன இறக்குமதி மீதான தடை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் என்ற ரீதியில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கும், இறக்குமதி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், திறைசேரிக் குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி தடை
அடுத்த ஆண்டுக்குள் வாகன இறக்குமதி தடை நீக்கப்படாவிட்டால், வருமான இலக்குகளை அடைய முடியாது,
எனவே வாகன இறக்குமதியை சீராக்க வேண்டும் என்று குழு முடிவு செய்துள்ளதாக திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகரித்த வருவாய் இலக்கை கருத்தில் கொண்டு குழு இந்த முடிவை திறைசேரிக்குழு எடுத்துள்ளது.
அமெரிக்க டொலர் விலையை நீண்ட காலத்திற்கு கட்டுப்படுத்த முடியாது என்றும், எனவே தடையை நீக்குவது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு
எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விபரக்குறிப்பு, உற்பத்தி ஆண்டு உட்பட இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
சுற்றுலாத் துறைக்கு தொடருந்து பெட்டிகள், வான்கள் உள்ளிட்ட 1,000 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று குழு முன்னர் பரிந்துரை செய்திருந்தது. அதற்கு அனுமதியும் கிடைத்தது.
இந்தநிலையில், வாகனங்களின் இறக்குமதியானது தற்போது ஏற்பட்டுள்ள வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு இந்த ஆண்டு பெப்ரவரியில் 4,520 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
அது மார்ச் மாதத்தில் 4,951 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வாகன இறக்குமதியால் இலங்கை வருடத்துக்கு 800 மில்லியன் டொலர்களை இழக்கும். எனினும் வரி வருமானம் 340 பில்லியன்களாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் – சிவா மயூரி
இலங்கை உட்பட்ட 6 நாடுகளுக்கு வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |