Home முக்கியச் செய்திகள் கொழும்பில் நீர் விநியோகத் தடை: அதிகாலையில் நேர்ந்த பாரிய அனர்த்தம்

கொழும்பில் நீர் விநியோகத் தடை: அதிகாலையில் நேர்ந்த பாரிய அனர்த்தம்

0

கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் குழாய் ஒன்றில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (National Water Supply and Drainage Board) தெரிவித்துள்ளது.

இதனால் கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ரக்மல்கம, பலன்வத்த மற்றும் மத்தேகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீடுகளுக்கான நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலை அனுமதி

ஹைலெவல் (high level) வீதியில் கொடகம சந்திக்கு அண்மித்த பகுதியில் உள்ள நீர் குழாய் மீது கார் மோதியதாலேயே இந்த நீர் விநியோக தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், இன்று (17) அதிகாலையில் இருந்து விபத்து இடம்பெற்ற இடத்திலுள்ள பெரிய நீர் குழாயில் இருந்து பாரிய அளவில் நீர் வௌியேறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மேலும், விபத்தின் போது காரில் பயணித்த நால்வர் சிறு காயங்களுடன் ஹோமாகம (
Homagama) ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version