Home இலங்கை சமூகம் வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல்

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல்

0

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் யாழ். நகரில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார்  மற்றும் வவுனியா ஆகிய 05 மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாவுடன் தொடர்புடைய வியாபாரங்களில் ஈடுபடும் உரிமையாளர்களின் கூட்டமைப்பான வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் (NPTA) வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த புதன்கிழமை(11) மாலை 05 மணியளவில் யாழ். நகரில் அமைந்துள்ள ஜெட்விங்(Jetwing) விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இடம்பெற்ற நிர்வாகத் தெரிவில் வலம்புரி மற்றும் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியின் உரிமையாளர் ஜெகசீலன் தலைவராகவும் D Villa உரிமையாளர் A.டிலான் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியம்

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியம் என்பது வடமாகாணத்தில் உள்ள சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையோடு தொடர்புபட்ட ஏனைய அமைப்புகளையும் இணைத்து செயற்படுகின்ற ஒரு பொது அமைப்பாகும்.

வடமாகாண சுற்றுலாத் துறையினை வளமான சுற்றுலாத்துறையாக மேம்படுத்துவதுடன் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதும் இவர்களது பிரதான பணியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version