Home சினிமா கல்யாணம் முடிந்த கையோடு தனது கணவர் வெற்றி வசந்த் குறித்து சீரியல் நடிகை வைஷ்ணவி போட்ட...

கல்யாணம் முடிந்த கையோடு தனது கணவர் வெற்றி வசந்த் குறித்து சீரியல் நடிகை வைஷ்ணவி போட்ட பதிவு…. அடடே அடடே

0

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் டாப் சீரியலான சிறகடிக்க ஆசை தொடரில் நடித்து பிரபலமாகி இருக்கிறார் வெற்றி வசந்த்.

இதற்கு முன் சினிமாவில் நிறைய வேலைகள் செய்துள்ள இவருக்கு இந்த தொடரே நல்ல வாழ்க்கையை கொடுத்துள்ளது. இவர் சில மாதங்களுக்கு முன் விஜய் டிவியின் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவியை காதலிப்பதாக அறிவித்தார்.

பின் இருவருக்கும் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்தது. சமீபத்தில் திருமணமும் சூப்பராக நடந்தது, பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மனைவி பதிவு

இந்த நிலையில் திருமணம முடிந்துள்ள நிலையில் நடிகை வைஷ்ணவி தனது கணவர் குறித்து உருகி உருகி ஒரு அழகான பதிவு போட்டுள்ளார்.

அதில் அவர், என்னை மிகவும் நேசித்ததற்கு நன்றி, என் முகத்தில் இந்த அளவிற்கான மகிழ்ச்சியை நான் பார்த்தது இல்லை.

அந்த மகிழ்ச்சியை கொடுத்ததற்கு நன்றி. என்னை சிரிக்க வைக்கிறீர்கள், உங்களுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த சந்தோஷத்தை வேறு யாராலும் எனக்கு கொடுக்க முடியாது, இந்த அளவிற்கு என்னை பற்றி நான் யாரிடமும் இவ்வளவு வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதில்லை.

என்னை முழுவதும் தெரிந்த கொண்ட நபர் நீங்கள் மட்டும்தான் என உருகி உருகி ஒரு பெரிய பதிவு போட்டுள்ளார். அதற்கு வெற்றி வசந்த், ஐ லவ் யூ மா என கமெண்ட் செய்து இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version