பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள் உயிர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை ஒப்படைக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிகளை ஒப்படைக்காத நபர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா அல்லது அவர்கள் நாட்டில் வசிக்கிறார்களா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இந்த நிலையில், ஆயுதங்களை ஒப்படைக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this…
https://www.youtube.com/embed/fIfgijzWw4o
