Home முக்கியச் செய்திகள் தெற்கு கடலில் மற்றுமொரு போதைப்பொருள் படகு பறிமுதல்!

தெற்கு கடலில் மற்றுமொரு போதைப்பொருள் படகு பறிமுதல்!

0

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஆறு இலங்கை கடற்றொழிலாளர்களுடன் மற்றுமொரு கடற்றொழில் படகு கைது செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த படகு நாட்டின் தெற்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள்  பொதிகள்

குறித்த படகில் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படக்கூடிய சுமார் 15 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் உள்ளிட்ட படகை இன்று (20.11.2025) பிற்பகல் தங்காலை கடல்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version