Home இலங்கை அரசியல் கைதுசெய்யப்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கைதுசெய்யப்பட்ட எதிர்கட்சி உறுப்பினர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

புதிய இணைப்பு

ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தலவாக்கலை, லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (02) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால, கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தக நிலைய மோசடி

குறித்த நகர சபைக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றை குத்தகைக்கு வழங்கும் ஏலத்தின் போது அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏலச் சட்டத்தின் போது அதிக விலைக்கு ஏலம் கேட்டவருக்குப் பதிலாக, குறைந்த விலைக்கு ஏலம் கேட்டவருக்கு சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையம் வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 2.38 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version