Home இலங்கை அரசியல் மஹிந்த ராஜபக்ஷவின் மேலுமொரு பாரிய மோசடி அம்பலம்

மஹிந்த ராஜபக்ஷவின் மேலுமொரு பாரிய மோசடி அம்பலம்

0

  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு (NHDA) சொந்தமான கொழும்பு மோதர பகுதியிலுள்ள பிரதீபா மண்டபத்திற்கு அருகிலுள்ள இரண்டு ஏக்கர் 16 பேர்ச்சஸ் காணியை மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஐம்பது இலட்சத்திற்கு குத்தகைக்கு கொடுத்து 4600 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த காணி முப்பது வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

மோசடிகளால் ஏற்பட்ட பாதிப்பு

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மாளிகாவத்தை வாகன நிறுத்துமிடம் குத்தகைக்கு வழங்கலினால் ஒரு மாதத்திற்கான நட்டம் 45,000 ரூபாவாகும்.

அத்தோடு சான்ச்சி ஆராச்சி மாவத்தையில் உள்ள வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளை புனரமைப்பதற்காக 68 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஒரு வீட்டில் கூட எவ்வித புனரமைப்பும் செய்யப்பட்டவில்லை.ஆனால் புனரமைப்பு செய்யப்பட்டதாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
மொரட்டுவ சொய்சாபுர வீடமைப்பு திட்டத்தில் அரகல போராட்டத்தில் தீ வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவர்கள் குறித்த பாதிப்புக்காக பல கோடி ரூபாய்களை நட்டமாக பெற்றுக் கொண்டவர்களாவர்.
இவர்கள் மக்களின் பணத்தை,தங்களின் பரம்பரை சொத்துக்களாக பகிர்ந்து கொண்ட விதங்கள் தான் இவை.

இந்த பாதிப்புக்களையே மக்கள் இன்று அனுப்பவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version