Home இலங்கை அரசியல் மகிந்தவுக்கு எதிராக வெளியான அறிக்கை

மகிந்தவுக்கு எதிராக வெளியான அறிக்கை

0

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த 11 வருட காலப்பகுதியில் 978 உள்நாட்டு விமான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 2014ஆம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக அதிகளவான உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தென்னிலங்கை ஊடகவியலாளர் ஒருவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படையை மேற்கோள் காட்டி பெறப்பட்ட அறிக்கைக்கு அமைய இந்த விடயம் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை முதலில் இலங்கை விமானப்படை வழங்க மறுத்துள்ளது.

விமானப்படைக்கு வழங்கப்பட்ட உத்தரவு

ஆனால் தகவல் அறியும் ஆணையத்திடம் முறையிட்டதைத் தொடர்ந்து, விமானப்படைக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய ஆணையம் தொடர்புடைய தரவுகளை வெளிப்படுத்தியுள்ளது.

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அதே வருடம் 08 விமானப்படையின் உலங்கு வானுர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு அதிகூடிய எண்ணிக்கையான 148 விமானங்களும், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் 10 விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version