கல்தென்ன பகுதியில் உள்ள பிரபல விகாரை ஒன்றில் சந்தேகத்திற்கிடமான சொகுசு ஜீப் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெல்தெனிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தெல்தெனிய பிரிவுக்குப் பொறுப்பான மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ரோஷன் அமரசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு காவல்துறை புலனாய்வாளர்கள் குழு இன்று(03) கல்தென்ன விகாரைக்கு சென்று சொகுசு வாகனத்தை கைப்பறியது.
செயலிழந்த நிலையில் காணப்பட்ட வாகனம்
காவல்துறையினர் அங்கு சென்றபோது, வாகனத்தின் பற்றரி அகற்றப்பட்டு அது செயலிழந்து போனதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்திற்கிடமான வாகனம் தொடர்பில் நீண்ட நேரம் விசாரித்ததில், அது போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
