Home முக்கியச் செய்திகள் செவ்வந்தியை தேடிய காவல்துறையினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

செவ்வந்தியை தேடிய காவல்துறையினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

0

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியை போன்று தோற்றமுடைய மற்றுமொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல், குளியாப்பிட்டி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டி காணி பதிவு அலுவலகத்திற்கு வந்த நிலையிலேயே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் 

கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், அண்மையில், இஷாரா செவ்வந்தியை போன்ற உருவமைப்பு கொண்ட பெண்கள் அனுராதபுரம் மற்றும் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version