Home முக்கியச் செய்திகள் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்

0

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் மிக விரைவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதற்கான ஆரம்ப எதிர்பார்ப்பை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டவுடனேயே புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், நாடாளுமன்றத் தேர்தல் உடனடித் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ள நிலையில் அதற்கான காலத்தை அவர் குறிப்பிடவில்லை.

வசதியான அமைச்சரவை

பொதுவாக ஜனாதிபதி தேர்தல் முடிந்த நிலையில் புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்படும் போது, அவருக்கு வசதியான அமைச்சரவை அமைக்கப்படுவது அவசியமானதாகும்.  

இதன் போதே ஜனாதிபதியினால் தமது திட்டங்களை முன்னெடுக்க முடியும் அதுவும் தற்போது ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த இந்த வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில் தக்கவைத்துக்கொள்ள முடியுமாக இருக்கும்.

எனவே அநுரகுமாரவின் எதிர்பார்ப்புக்கு அர்த்தம் இருப்பதாக அரசியல் தரப்பினர் தெரிவிப்பதுடன் அதுவரை தற்காலிக அமைச்சரவை ஒன்று அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/anua-informed-parliament-elections-in-sri-lanka-1727090985?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version