Home முக்கியச் செய்திகள் 2025 முதல் ஒன்பது நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

2025 முதல் ஒன்பது நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

0

இந்த வருடத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 70,944 சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சுற்றுலா அபிவிருத்தி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, 11,789 சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய நாடுகள்

மேலும், ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் குறிப்பிட்ட காலகட்டத்தில் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு (2024) மாத்திரம் நாட்டுக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,053,465 ஆகும்.

NO COMMENTS

Exit mobile version