தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுபமா பரமேஸ்வரன்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த பைசன் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள படம்தான் லாக்டவுன்.
கொரோனா காலகட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர். ஜீவா. இப்படத்தில் சார்லி, நிரோஷா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. வருகிற டிசம்பர் 5ஆம் தேதி வெளிவரவிருக்கும் லாக்டவுன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:
