Home இலங்கை ட்ரம்ப் -அநுர டீல்! கொழும்பில் கப்பல்!

ட்ரம்ப் -அநுர டீல்! கொழும்பில் கப்பல்!

0

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பெரும் செலவினங்களால் இந்தவருடம் மட்டும் இலங்கைக்கு தற்காலிக நிதித்தளர்வை வழங்கப்பட்டாலும் அடுத்தவருடம் மீண்டும் தமது அமைப்பின் கடுமையான விதிகளுக்கு இலங்கையர்கள் என்ற எச்சரிக்கையும் விடுத்த சமகாலத்தில் தான் அனைத்துலக நாணய நிதியம் இன்னொரு நிதித்தவணையை விடுவித்துள்ளது.

இலங்கை ரூபாயின் வீழ்ச்சியுடன் நாடு மீண்டும் பணவீக்க அபாயங்களை எதிர்கொள்வதால் இந்த ஆண்டின் முடிவில் பொருளாதார வளர்ச்சி வீதம் இன்று குறையும் என எதிர்வுகூறப்படும் நிலையில் இலங்கையர்கள் இப்போது இருப்பதை விட இன்னும் அதிகமாக வரி செலுத்தவேண்டும் என்ற செய்தி ஐ.எம். எப்பால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஐ.எம்.எப் எச்சரிக்கைகள் வந்த பின்னணியில் அமெரிக்க தலைவர் ட்ரம்ப்புடன் அநுர போட்ட வரி டீலின் அடிப்படையில் அமெரிக்காவின் மசகு எண்ணெய் கப்பல் ஒன்றும் நேற்று முதன்முறையாக இலங்கைக்குள் நுழைந்தது. அதுபோல மீண்டும் ஒரு முறை டித்வா சூறாவளி சாக்கில் அவசரகால சட்டத்தின் கீழ், அத்தியாவசிய சேவை பிரகடனமும் வந்துவிட்டது.

இந்தப் பின்னணியில் சிறிலங்காவின் விமான போக்குவரத்து வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய நிதி மோசடியில் கைமாறப்பட்ட பெரும் இலஞ்சப் பணததின் மர்மங்களை விலக்கும் நகர்வுகள் தொடர்கின்றது.

அத்துடன் நேற்று இத்தாலியில் இடம்பெற்ற ஒரு மாபியா எதிர்ப்பு நகர்வும் அதில் பறிமுதல் செய்யப்பட்ட 200 மில்லியன் யூரோ மதிப்பிலான சொத்துக்களும் இலங்கைக்கும் ஒரு செய்தியை கூறும் நிலையில் இந்த விடயங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு…

 

https://www.youtube.com/embed/OTo0_oRFyYM

Source: https://ibctamil.com/article/anura-deal-with-trump-over-reciprocal-tariffs-1780050413

NO COMMENTS

Exit mobile version