Home இலங்கை அரசியல் ராஜபக்சர்களின் கோட்டையை சரித்த அநுர

ராஜபக்சர்களின் கோட்டையை சரித்த அநுர

0

நடைபெற்று முடிந்துள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பல எதிர்மறையான முடிவுகள் வந்துள்ள நிலையில்  இந்த விடயம் அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜபக்சர்களின் கோட்டையான மெதமுலன தொகுதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

ராஜபக்சர்களின் கோட்டை

இதன்மூலம் ராஜபக்சர்களின் சொந்த தொகுதியில் கூட மக்களின் ஆதரவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்த ஊரான மெதமுலன தொகுதியில் 1,115 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றுள்ளது.

மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 768 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

மெதமுலனவில் ராஜபக்ச குடும்பத்தினர் நீண்ட காலமாக அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும், இந்தத் தேர்தலில் அவர்கள் அதற்கான ஆணையை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவொரு ஆரம்பம்

அதேவேளை நாடாளவிய ரீதியில் ராஜபக்சர்களின் கட்சி பெற்ற வாக்கு வீதம் சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் வாக்குகள் அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில் இதுவொரு ஆரம்பம் என நாடாளுமன்ற உறுப்பனர் நாமல் ராஜபக்ச இன்று சூளுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version