Home இலங்கை அரசியல் ரணிலின் கொள்கையை தான் திசைக்காட்டி அரசு பின்பற்றுகிறது! சாடும் முன்னாள் பிரதி சபாநாயகர்

ரணிலின் கொள்கையை தான் திசைக்காட்டி அரசு பின்பற்றுகிறது! சாடும் முன்னாள் பிரதி சபாநாயகர்

0

ரணில் விக்ரமசிங்கவின்(Ranil Wickremesinghe) பொருளாதார கொள்கைகள் நாட்டுக்கு எதிரானது என்று விமர்சித்த தேசிய மக்கள் சக்தி இன்று அவரது கொள்ளைகளை அச்சொட்டாக நடைமுறைப்படுத்துகிறது என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச(Ajith Rajapakse) தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் துரதிஷ்டத்தால் தான் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

நாட்டு மக்கள் வெகுவிரைவில் உண்மையை விளங்கிக் கொள்வார்கள். ரணிலின் புண்ணியத்தால் நாட்டை நிர்வகிக்கும் உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

சொல்வது இலகு, செயற்படுவது கடினம் என்பதை தற்போதைய அரசாங்கம் உண்மை என்று நிரூபித்துள்ளது. 

தேர்தலில் வெற்றிப் பெறுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார். 

அதேபோல் 75 ஆண்டுகால அரசியலை சாபம் என்று விமர்சித்து நாட்டுக்காக சேவையாற்றிய அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்பை தோற்றுவித்தார்.

போலியான வாக்குறுதி

தேசிய மக்கள் சக்தியின் போலியான வாக்குறுதி மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். 

தேர்தல் வெற்றிக்காக தேசிய மக்கள் சக்தி வழங்கிய நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக திரும்பியுள்ளது.

பொருளாதார மீட்சிக்கு அரசாங்கத்திடம் சிறந்த திட்டங்கள் ஏதும் கிடையாது.” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version