தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழி தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி விடயம்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்துக்கு வர முன்னர் பல்வேறு விடயங்களை கூறியிருந்தது.
ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இதற்கு முந்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உள்ளிட்ட முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே வழியிலேயே பயணிக்கின்றது.
அந்த வகையில் அரசாங்கம் இப்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.
அதே வேளை, வாகன இறக்குமதி விடயம் அவதானமாக கையாளப்பட வேண்டும். அரசாங்கத்துக்கு உரிய வரி கிடைக்கும் அதே வேளை அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்காத வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ரவி கருணாநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.