Home இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் அநுர அரசின் பட்ஜெட் : மொட்டு எம்.பி கிண்டல்

வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் அநுர அரசின் பட்ஜெட் : மொட்டு எம்.பி கிண்டல்

0

தேசிய மக்கள் சக்தி(npp) தலைமையிலான அரசாங்கத்தின் இந்த வரவு செலவுத் திட்டம், வாக்குறுதிகளை மீறிய வரவு செலவுத் திட்டமாக வரலாற்றில் இடம்பிடிக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக(D.V. Chanaka) தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் வரவு செலவுத் திட்டம் குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசு ஊழியர்களின் சம்பளம்

“அரசு ஊழியர்களின் சம்பளத்தை ரூ. 25,000 அதிகரிப்பதாகவும், சுகாதாரத் துறைக்கான மருந்துகள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கான வற் வரியை நீக்குவதாகவும் கூறி அவர்கள் ஆட்சிக்கு வந்தனர்.”

ஆனால் அது எதுவும் நடக்கவில்லை என்றும், அதற்கு பதிலாக, பட்ஜெட் வெளியிடப்படுவதற்கு முன்பே மக்களிடமிருந்து 500 பில்லியன் ரூபாய் புதிய வரிகள் வசூலிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

அரிசி உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நேரத்தில், மக்கள் எதிர்பார்த்த நிவாரணத்தில் திருப்தி அடையவில்லை என்று எம்.பி. தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் அதே வழியில் அரசு சொத்துக்களை விற்கும் திட்டத்தைத் தொடர்கிறது என்றும், இது இலட்சியங்களை ஈர்ப்பதாகக் கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

             

NO COMMENTS

Exit mobile version