Home இலங்கை அரசியல் அநுர அரசிற்கு பொன்சேகாவின் மறைமுக ஆதரவு! பட்டிணி கிடக்கவும் தயாராம்..

அநுர அரசிற்கு பொன்சேகாவின் மறைமுக ஆதரவு! பட்டிணி கிடக்கவும் தயாராம்..

0

ஊழல் மோசடி மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதென்றால் பட்டிணி கிடக்கவும் நாம் தயார் என்று பீல்ட்மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னோக்கிச் செல்லும் அரசாங்கம் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

இந்த அரசின் ஆட்சி ஏனைய அரசாங்களுடன் ஒப்பிடும் போது மேம்பட்டதாகவே காணப்படுகிறது.
இவற்றை முற்றாக ஒழித்தால் நாட்டுக்குக் கட்டாயம் நன்மை பயக்கும்.

அரசின் சில செயற்பாடுகளே பின்னடைவாக காணப்படுகின்றன. தற்போது பொது மக்களின் சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்துவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை செயற்படுத்துவதில் அரசு ஓரளவு முன்னோக்கிச் சென்றுள்ளது.

மேலும் போதைப் பொருள் இளைஞர் சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
போதைப் பொருளை முற்றாக அரசு கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தாலே இளைஞர் சமூகத்தைக் காப்பாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version