தனது தந்தை ராஜித் சேனாரத்ன கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும், தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படுவது உறுதி என சதுர சேனாரத்ன(Chathura Senaratne) தெரிவித்துள்ளார்.
“இந்த அரசாங்கத்தை நாங்கள் நிச்சயமாக கவிழ்ப்போம். என் தந்தை கைது செய்யப்பட்டாலும் இல்லாவிட்டாலும், இந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும்” என்று அவர் கூறினார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில்
இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது சது சேனாரத்ன இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
அவரது தந்தை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (rajitha senaratne)இன்று கொழும்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த பின்னணியில் அவரது கருத்து வந்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு
26.2 மில்லியன் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் மணல் சுரங்க ஒப்பந்தம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி ராஜித சேனாரத்ன முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
